வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் அமைந்த சம்ஹிதா பிரிவில் உள்ள குறிப்புகளை கருதிக்கொள்வோம். இந்தியர்கள் ஏற்படுத்திய நான்கு வேதக் குறிப்புகளில் மிக தொன்மையானதாக விளங்குவது ரிக் வேத குறிப்பாகும். இன்றிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் முதல் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்த குறிப்புகள் தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ‘வேதவியாசர்’ என்ற ஞானி ரிக் வேதத்தில் சம்ஹிதா பிரிவில் பத்து புத்தகங்களாக வெவ்வேறு எண்ணிக்கை கொண்ட வழிப்பாட்டு முறைகளை விளக்கும் குறிப்புகளை ஏற்படுத்தினார்.

வேதவியாசர்

வேதவியாசர் ஏற்படுத்திய பத்து புத்தகங்களில் அமைந்த குறிப்புகளின் எண்ணிக்கையை கீழ் காணலாம்.

வேதவியாசர் பத்து புத்தகங்களில் மொத்தம் 1017 குறிப்புகளை ஏற்படுத்தியிருந்ததை அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம். சரி, வேதவியாசர் என்ற இந்திய ஞானி ஏதோ வேத குறிப்புகள் கொண்ட தொகுப்பை ரிக் வேதத்தில் ஏற்படுத்தியிருந்தார். இதில் என்ன ஆச்சரியப்பட இருக்கிறது? இந்த கேள்விக்கு சரியான விடைக் காண நாம் சற்று சிந்திக்க தயாராக வேண்டும். இந்த விடையை அறிய நாம் முதலில் கீழ்காணும் அட்டவணைகளை கருதிக் கொள்வோம்.

வேதவியாசர் அமைத்த பத்து புத்தகத்தின் குறிப்புகளை கொண்டே மேற்காணும் இரு அட்டவணைகளும் அமைந்துள்ளன. முதல் அட்டவணை புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn) ஆகிய கிரகங்கள் பூமியை பொருத்தமட்டில் சூரியனை ஒரு முழு சுற்று சுற்றி வரும் நாட்களின் எண்ணிக்கையை குறிக்கிறது. இந்த கிரகங்களின் சுற்றுப்பாதை கால அளவை அறியுமாறு வேதவியாசர் தமது புத்தகங்களின் குறிப்புகளை மறைமுகமாக ஏற்படுத்தியிருப்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. வேதவியாசர் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் வழங்கிய கிரகங்களின் சுழற்சி கால அளவை இன்றைய நவீன மதிப்புடன் ஒப்பிடுகையில் மிகச் சரியாக அமைவது உண்மையில் நம்மை வியப்பில் ஆழ்த்தும். புதன் கிரகத்துக்கு மட்டும் வேறுப்பாடு சற்று அதிகமாக இருப்பதை காணலாம். இந்த கால அளவை இன்று வானியல் அறிஞர்கள் ‘Synodic Period’ என்று அழைப்பர்.

இரண்டாம் அட்டவணையில் மேற்கண்ட கிரகங்கள் நட்சத்திரங்களை பொருத்தமட்டில் சூரியனை ஒரு முழு சுற்று சுற்றி வரும் நாட்களின் எண்ணிக்கையை குறிக்கிறது. இந்த சுழற்சி கால அளவு மதிப்புகளும் சனி கிரகத்தை தவிர மற்ற கிரகங்களுக்கு இன்றைய மதிப்புடன் ஒப்பிடும் பொழுது மிகச் சரியாக அமைவதை காண முடிகிறது. இந்த கால அளவை இன்று வானியல் அறிஞர்கள் ‘Sidereal Period’ என்று அழைப்பர்.

வேதங்களின் நான்கு பிரிவினை முதன் முதலில் மிகச் சரியாக வகைப்படுத்தி அதன் தன்மைகளை விளக்கியவர் வேதவியாசர் ஆவார். இவர் 18 புராணங்களை வழங்கியுள்ளார். அவைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இந்தியாவின் இரு பெரும் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படும் “மஹா பாரதம்” என்ற காப்பியமாகும். மஹா பாரதத்தை ஐந்தாவது வேதமாக இந்திய அறிஞர்கள் கருதுகின்றனர். அதில் இரு பெரும் செய்திகளை வேதவியாசர் கூறியிருக்கிறார். அவை ‘பகவத் கீதை’ மற்றும் ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ ஆகும். வேதவியாசர் மஹா பாரதத்தில் பல அறிவியல் சார்ந்த செய்திகளை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கியிருப்பது இன்றும் அறிஞர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த உதாரணத்திலிருந்து நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். வேதவியாசர் தாம் வழங்கிய பத்து புத்தகங்களில் அமைத்த குறிப்புகளில் நேரடியாக அறிவியல் கருத்துக்கள் இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் அமைத்த குறிப்புகளின் எண்ணிக்கை அளவு மிகுந்த அறிவியல் உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வேதவியாசர் தமது அறிவியல் சிந்தனையை மறைமுகமாக வழங்கியிருக்கிறார் என்பது இதிலிருந்து புலப்படும்.

மேற்கண்ட அட்டவணைகளின் மூலம் மேலும் சில முக்கிய உண்மைகளை நாம் அறியலாம். அட்டவணைகளில் குறிப்பிடப்பட்ட ஐந்து கிரகங்களுடன் சூரியன் மற்றும் சந்திரன் (நிலவு) ஆகிய இரு வான்கோள்களை சேர்த்து ஒரு வாரத்தை ஏழு நாட்களாக பிரித்து அந்த நாட்களுக்கான பெயர்களை இந்த ஏழு வானியல் பொருட்களை கொண்டு அமைத்தனர். சூரியனுக்கு (Sun–Sunday) ஞாயிறு, சந்திரனுக்கு (Moon-Monday) திங்கள் என்றும் மற்ற ஐந்து கிரகங்களுக்கு அதன் தன்மைக்கேற்றவாறு செவ்வாய் முதல் சனி வரை பெயரிட்டனர். சூரியனிலிருந்து சந்திரன் ஒளிப் பெற்று மிளிர்வதால் ஞாயிருக்கு அடுத்த நாளை திங்கள் எனக் கருதினர். இதன் மூலம் சந்திரன், சூரிய ஒளியைக் கொண்டு மிளிரும் ஒரே இயற்கை கோளாக விளங்குகிற உண்மையை அக்கால இந்தியர்கள் அறிந்திருந்ததை உணரமுடிகிறது. அதேபோல் ‘குரு’ மற்றும் ‘சுக்கிரன்’ என்ற பெயர்களை வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு முறையே அமைத்தனர். இந்திய கலாச்சார நம்பிக்கையின் படி, ‘குரு’ தேவர்களின் வழிக்காட்டியாகவும், ‘சுக்கிரன்’ அசுரர்களின் வழிக்காட்டியாகவும் விளங்கியதால் இப்பெயர்களை வைத்ததாக நம்பப்படுகிறது. சீரிய சிகப்பு நிறத்துடன் ஒளிரும் கிரகமாக Mars விளங்கியதால் அதற்கு ‘மங்களா’ (மிக ஒளி மிகுந்தது) என பெயரிட்டனர். இதுவே தமிழில் செவ்வாய் (சிவப்பு நிறத்தில் தோன்றும் வான்கோள்) என்று அழைக்கப்படலானது.

மேலும் கிரகங்களின் பெயர்களை அதன் அளவுக்கேற்றவாறு பண்டைய இந்தியர்கள் அமைத்திருந்தனர். வியாழன் (Jupiter) கிரகத்திற்கு ‘குரு’ என்ற பெயரை அமைத்திருந்தனர். ‘குரு’ என்றால் ‘மிகப் பெரியது’ என பொருள்படும். உண்மையில் வியாழன் கிரகம் கொடுத்த ஐந்து கிரகங்களில் அளவில் பெரியதாக அமைந்ததால் அதனை ‘குரு’ என அழைத்தனர். அதேபோல் மேற்கண்ட ஐந்து கிரகங்களில் சனி கிரகம் மிக குறைவான வேகத்தில் தனது சுற்றுப்பாதையில் சூழல்வதை அறிந்த அக்கால இந்தியர்கள் “Shanaih charathi iti Shanaishchara” என்று கூறினர். இத்தொடர் “மிக குறைவான வேகத்தில் சூழல்வது சனி கிரகமாகும்” என்ற பொருளில் அமையும்.

மேலும் இந்த சுழற்சி கால அளவுகள் பூமியிலிருந்தோ, நட்சத்திரங்களில் இருந்தோ அமைவதனால் இக்கால அளவுகள் சார்புத் தன்மை வாய்ந்த அளவீடுகள் என்பதை இருபதாம் நூறாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐந்ஸ்டைன் 1905 ல் தான் வெளியிட்டார். ஆனால் அன்றே இந்தியர்கள் சார்புத் தன்மை வாய்ந்த கோட்பாடுகளை அறிந்து கூறியிருப்பது மிக விந்தையான செய்தியாக அமைகிறது. இதனாலேயே ஐந்ஸ்டைன் “நான் பகவத் கீதையை எனது அறிவியல் சிந்தனையை எழுச்சியூட்டத் தக்க மூல நூலாக கருதுகிறேன். அதுவே எனது அறிவியல் கோட்பாடுகளுக்கும், கண்டுப்பிடிப்புகளுக்கும் ஆதாரமாக விளங்கும் படைப்பாகும்” என்று கூறியுள்ளார். மேலும் “இந்தியர்களே நமக்கு எண்ணும் முறையை கற்று கொடுத்தவர்கள், அவர்களது இந்த பங்களிப்பு இல்லை என்றால் இன்று உலகில் அறிவியல் முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை. அவர்களுக்கு நாம் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறோம்” என்று இந்தியாவின் அறிவியல் பெருமையை ஐந்ஸ்டைன் பறைசாற்றியுள்ளார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இணையில்லா இந்திய அறிவியல் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book